• Breaking News

    யாழ்ப்பாணத்தில் விபத்து - இளைஞன் படுகாயம்...!

     யாழ்ப்பாணம் - சிவலிங்கப்புளியடிச் சந்தியில் இன்று(08) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளார்.

    யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட காங்கேசன்துறை வீதி, சிவலிங்கப்புளியடிச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன ஒன்றன் பின் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், முச்சக்கரவண்டிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் மோதியதில் அருகில் இருந்த வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad