சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமிகள் மாயம்!!! - காவல்துறை வலைவீச்சு...
வத்தேகம – மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் மாயமாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் தனது வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில், ஏனைய நால்வரை தேடும் பணிகளில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த சிறுமிகள் சிறுவர் இல்லத்திற்கு அருகிலுள்ள பாடசாலைக்கு கல்வி நோக்கத்திற்காக அனுப்பியபோது, கடந்த 6ஆம் திகதி தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தப்பியோடியவர்களில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை வத்தேகம காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு பாதுகாவலருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மற்றைய நான்கு சிறுமிகளும் 16 -18 வயதுடையவர்கள் எனவும், இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று மதியம் வரை எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புஸ்ஸல்லாவ, உடிஸ்பத்துவ, ஹன்டெஸ்ஸ மற்றும் வத்தேகம ஆகிய பிரதேசங்களில் இருந்து சிறுவர் இல்லத்திற்கு வருகைதந்த சிறுமிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை