• Breaking News

    உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்...!

     


    உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உலகளாவிய ரீதியில் பரவிவரும் புதிய ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வார இறுதியில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இதற்கமைய, வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,783 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன்,அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களில் தங்கத்தின் விலை குறைவடைய வாய்ப்பில்லை என்றும் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    உலக அளவில் தங்கத்தின் விலை ஒரு மாத இடைவெளியில் குறைவடைந்து சென்ற நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad