மஹிந்தவுக்கு என்ன நடந்தது? அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் திடீர் விலகல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அனைத்து விழாக்களில் இருந்தும் குறுகிய காலத்திற்கு விலகியிருக்க வேண்டியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள வைத்திய ஆலோசனைக்கமைய இந்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரதமரின் தலைமையில் நடைபெறவிருந்த பல வைபவங்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்றும், நேற்றுமுன்தினமும் இடம்பெற்றன.
பிரதமரினால் கையொப்பமிட திகதி குறிக்கப்பட்டிருந்த திருமண நிகழ்வுகளில் பிரதமருக்கு பதிலாக நாமல் ராஜபக்ஷவே கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, பிரதமர் நவலோக்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷ அதனை நிராகரித்துள்ளார்.
ஆனாலும் பிரதமருக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை