• Breaking News

    இலங்கையில் பழங்குடியினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

     


    பிபில ரதுகல கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் சுதா வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.


    பொருளாதார நெருக்கடி மோசமடைந்துள்ள நிலையில் தனது மக்கள் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


    இக்கிராமத்தில் சுமார் 110 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், இளைஞர்கள் எவருக்கும் வேலையும் இல்லை, கூலி வேலை கூட இல்லை என்றும் அதனால் ஒரு வேளை உணவைக் கூட தேட முடியாத நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.


    தற்போதைய உணவுப் பற்றாக்குறையால் சிறுவர்கள் பாடசாலை செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சில குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.


    உரம் மற்றும் நிலப்பிரச்சினை ஆதிவாசி மக்கள் விவசாயம் செய்வதை கடுமையாக பாதித்துள்ளதால் விவசாய நிலங்கள் அனைத்தும் வறண்டு வருவதாகவும் பழங்குடியினத் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad