• Breaking News

    உணவு பணவீக்கத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம்! - அதிர்ச்சி தகவல்

     


    உலகளவில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


    இதன்படி செப்டெம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.


    இதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.


    இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளது.


    மேலும், உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடு ஜிம்பாப்வே, இது 353 சதவீதம். லெபனான் மற்றும் வெனிசுலா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.


    இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் துருக்கி, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகள் உள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad