• Breaking News

    திடீர் காலநிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

     திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பாரிய சுறாக்கள் மற்றும் திருக்கை போன்ற மீன்கள் தூண்டில் மூலம் பிடிக்கப்பட்டு ரூபா 8 இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இன்றும்(5) 12 அடி நீளமான கொப்புறா மீன் ஒன்றும் அப்பகுதி மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கொப்பறா மீனின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபா எனவும் இதேவேளை குறித்த மீனவரின் வலையில் சுமார் 50 கிலோ கிராம் எடையுள்ள திருக்கை இன மீன் ஒன்றும் பிடிபட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், பிடித்த மீன்களை சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வித சிரமமும் இன்றி கடற்தொழில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad