• Breaking News

    எரிவாயு நிறுவனங்கள் மீது தொடுக்கப்படவுள்ள வழக்கு...!

     எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

    எதிர்வரும் நாட்களில் லாஃப் எரிவாயு  மற்றும் லிற்றோ நிறுவனங்களுக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது.

    நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சட்டப் பிரிவு, வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் இது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    அநேகமான வெடிப்புச் சம்பவங்களின் போது எரிவாயு சிலிண்டருடன் தொடர்புடைய கருவிகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் எரிவாயு நிறுவனங்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவததாகத் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

    எரிவாயு கொள்கலன்களுடன் தொடர்புடைய கருவிகள் மற்றும் அவற்றை பராமரித்தல் குறித்து இரண்டு எரிவாயு நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழக நிபுணர்களின் ஆய்வு அறிக்கை இந்த வாரம் அரசதலைவரிடர் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad