யாழ். சாவகச்சேரி - தம்புதோட்ட வீதியில் சட்டவிரோத மண் அகழ்வு...
யாழ். தென்மராட்சி ஜே/301 கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட தம்புதோட்டம் நகரசபை ஊர் எல்லை வீதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது.
பிரதேச மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீதியில் இவ் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவ் வீதிக்கு அருகாமையில் இருக்கின்ற தோட்ட காணிகளில் சட்டவிரோத முறையிலும் இவ் மண் அகழ்வு தொடர்ச்சியான முறையில் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண் அகழ்வு தொடர்சியாக இடம்பெறுவதனால் ஊர் மக்கள் இராணுவத்தினரின் உதவியை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை