• Breaking News

    துப்பாக்கி முனையில் யாழ். ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் - தமிழ்த் தேசியக் கட்சி கண்டனம்...!

     கடந்த 2ஆம் திகதி பருத்தித்துறை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் ஊடகவியலாளர் ஜெ. சுலக்சன் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் கடுமையான கண்டனத்துக்குரியது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர், சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

    அவர் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    “முறையீடு செய்வதற்கு சென்ற ஒருவருக்கு காவல் நிலையத்தில் வைத்து துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.

    இச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை, பாரபட்சம் இன்றியும் முழுமையாகவும் விரைவாகவும் நடாத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாம் கோருகின்றோம்.

    யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச் சம்பவம் தொடர்பில் குரல் எழுப்புவதன் ஊடாக தமது கடமையை செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்” என்றுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad