சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 19 பேர் பாரிதாபச் சாவு!
கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில், அல் கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சாலையில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி தீ வைத்ததில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் பெலெட்வேய்ன் மற்றும் மாக்சாஸ் நகரங்களுக்கிடையில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி நகரங்களுக்கு இடையிலுள்ள சாலையில் வாகனங்கள் பல சென்று கொண்டிருந்த போது, பயங்கரவாதிகள் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீ வைத்துள்ளனர்.
இதில் 8 வாகனங்கள் முழுவதுமாக தீயில் கருகி உருக்குலைந்துள்ளதுடன் பலர் தீக்காயம் அடைந்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதுடன் இறப்பு வீதமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை