• Breaking News

    யாழ். இளைஞர்களின் முன்மாதிரியான செயல் - பாராட்டிய பொலிஸார்!

     


    யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்த கைச்சங்கிலியை எடுத்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் மூலமாக உரிமையாளரிடம் ஒப்படைத்த மூவருக்கு மானிப்பாய் பொலிசார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகியப்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம்  பயணித்த  சங்கானை பகுதியைசேர்ந்த ச.சபேஷ் வயது 32,ர.றெபீகன் வயது 20,ம.கோகுலன் வயது 25 ஆகியோர் மாகியப்பிட்டி பகுதியினூடாக  நேற்று முன்தினம் சுண்ணாகம் நோக்கி பயணித்த நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்த இரண்டு பவுன் கைச்செயினை அவதானித்துள்ளனர் .

    இதனையடுத்து குறித்த கைச்செயினை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

    இதனை அடுத்து பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தனது நகையை தவறவிட்டதாக கிடைத்த தகவலுக்க மைய மானிப்பாய் பொலிசார் குறித்த நபரை அழைத்ததோடு நகையை கண்டெடுத்தவர்கள் மூலமாகவே தவறவிடப்பட்டவரிடம் நகை கையளிக்கப்பட்டது இந்நிலையில் மானிப்பாய் பொலிசார் குறிப்பிட்ட மூன்று இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு   வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    அண்மைகாலமாக யாழ்பாணத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இம்மூன்று இளைஞர்களினதுப் செயற்பாடு முன்னுதாரணமாக கொண்டு  பிரதேச மக்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad