அமரர் ரா. ஸ்ரீதரனின் நினைவாக நடாத்தப்படும் மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நாளை அராலியில்!
அராலி விளையாட்டு பேரவையினரால் அமரர் ராஜநாயகம் ஸ்ரீதரன் அவர்களின் நினைவாக மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நாளைய தினம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் இடம் பெற உள்ளதாக அராலி விளையாட்டு பேரவையின் இணைப்பாளர் ப. தர்மகுமாரன் தெரிவித்தார்.
குறித்த மென்பந்தாட்ட சுற்று போட்டியில் 28 அணிகள் பங்கேற்று அணிகளுக்கிடையில் போட்டிகள் இடம் பெற்று அதனுடைய இறுதிப் போட்டி நாளைய தினம் அராலி சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அமரர் ஸ்ரீதரன் அவர்கள் அராலி மண்ணிற்கு பெருமை சேர்த்த ஒருவராகவும் அவர் விளையாட்டில் மட்டுமல்லாது கல்வித் துறையிலும் பல சாதனைகளை படைத்ததாகவும் எதிர்வரும் இளைஞர் சமுதாயம் அமரர் ஸ்ரீதரனை போன்று எதிர்காலத்தில் பலர் உருவாக வேண்டும் என்பதற்காக சிறிதரன் அவர்களின் நினைவாக இந்த விளையாட்டு சுட்டு போட்டி இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை