மரணத்திலும் இணைபிரியா தம்பதிகள் - நெகிழ்ச்சியை உண்டாக்கிய சம்பவம்!
திருமணமாகி 60 வருடங்கள் ஆன ஒரு தம்பதி ஒரே நாளில் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது. குருதெனிய, தம்பாவெல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
எண்பத்தெட்டு வயதான ஆர்.ஏ.எஸ்.ரணசிங்க மற்றும் அவரது எண்பத்தொரு வயதான அவரது மனைவி ஏ.ஜி. பண்டாரநாயக்க ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இராணுவத்தில் சேவையாற்றி 60 வருடங்களாக மனைவியுடன் வாழ்ந்து வந்த இவர் நேற்று முன்தினம் (30ம் திகதி) காலை உயிரிழந்துள்ளார். கணவரின் மரணச் செய்தி கேட்டு துக்கமடைந்த மனைவியும் சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் அன்பான தந்தை மற்றும் தாயான இந்த தம்பதியருக்கு பதினொரு பேரக்குழந்தைகள் உள்ளனர். மூத்த மகனும் இலங்கை காவல்துறையின் தலைமைப் பரிசோதகராக உள்ளார்.
இந்த தம்பதியின் இறுதி சடங்குகள் (10ம் தேதி) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை