• Breaking News

    தரிசு நிலங்களாக உள்ள காணிகளை இனங்காட்டினால் விவசாயம் செய்வதற்கு வழி சமைத்து தரப்படும் - நடனேந்திரன் தெரிவிப்பு!


    புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்களது காணிகள் இங்கே தரிசு நிலங்களாக காணப்பட்டால் அவற்றினை எமக்கு இனங்காட்டுங்கள். அந்த காணிகளில் விவசாயம் செய்வதற்கு ஏற்றாற்போல் வசதி செய்து தருகின்றோம் என வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

    "விதைப்போம் பயன்பெறுவோம்" என்னும் தொனிப்பொருளில் பயனாளிகளுக்கு நாட்டு விதைகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் சங்கானையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

    அதாவது, புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்களது காணிகள் இங்கே எவருக்கும் பயனற்ற விதத்தில் காணப்படுகிறது. எனவே தரிசு நிலங்களாக காணப்படும் குறித்த காணிகளை மக்கள் எமக்கு இனங்காட்டினால், அந்த காணிகளில் மக்கள் சிறு சிறு குழுக்களாக இணைந்து விவசாயம் செய்வதற்கு ஏற்ற வழிமுறைகளை உரிய தரப்பினரோடு கலந்துரையாடி ஏற்படுத்தி தருவோம்.

    விவசாயம் செய்வதற்கு பல மக்கள் காணிகள் இல்லாமல் திண்டாடுகின்றார்கள். ஆகவே இந்த நிலையை போக்கும் முகமாகவே இந்த செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதன்மூலம் சயதேவைப் பொருளாதாரம் பூர்த்தியாகி வறுமை நிலை நீங்கும் - என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad