வவுனியாவில் விறகு சேகரித்துக்கொண்டிருந்த பெண்ணிற்கு ஏற்பட்ட அவலம் - பொலிஸார் தீவிர விசாரணை!
ஈச்சங்குளம் – சாலம்பன் பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்தப் பகுதியில் நேற்றைய தினம் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா கல்மடுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளார்.
குறித்த பெண் தமது வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை