ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான யாப்பை திருத்தியமைப்பதற்கு மத்திய செயற்குழு அனுமதி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான யாப்பை திருத்தியமைப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், கட்சி தலைவருக்கான அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில் முக்கியமான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
உப தலைவர்கள் மற்றும் பொருளாளரை நீக்கும் அதிகாரம் தலைவருக்கு இருக்கின்றது. இந்த யோசனைக்கு மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 இல் இருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட உப தலைவர்கள் மற்றும் உப தலைவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கட்சி யாப்பில் மேலும் சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை