• Breaking News

    எதிர்க்கட்சியில் இணையும் முக்கிய 13 உறுப்பினர்கள்!


     ஆளும் தரப்பில் இருந்த பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இதனை இன்றைய அமர்வில் அறிவித்துள்ளார்.

    விசேட உரையொன்றை நிகழ்த்தி அவர் இதனை கூறினார். இதன்படி, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர்.

    இவ்வருடத்திற்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad