• Breaking News

    வெளிநாட்டுக்கு சென்ற பெண்களுக்கு இருட்டறையில் நடந்த கொடூரம் - வெளிவந்த பகீர் தகவல்!


     மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண் என்ற போர்வையில் 30 பெண்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர்களை பாலியல் வன்கொடுமை புரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

    அவர்களை டுபாயில் அஜ்மலில் உள்ள ரகசிய வீட்டில், இருட்டு அறையில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கையின் பின்னால் ஒரு கும்பல் இயங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

    வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சு, சுவிஸ் அபிவிருத்தி முகவர் இணைந்து நடத்தும் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான திட்டம் தொடர்பில் கம்பளையில் செய்தியாளர் மாநாடு ஒன்று நேற்று நடைபெற்றது.

    இதன்போது திட்டத்தின் முகாமையாளர் சரத். துல்வல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

    நாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களை பல்வேறு இடங்களில் தடுத்து வைப்பதாகவும், அவர்களுக்கு முறையான உணவு, நீர் கூட வழங்கப்படுவதில்லை எனவும் அவர்களின் சம்பள பணத்தையும் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad