கவனக்குறைவால் ஏற்பட்ட சோகம் - 1600 பேர் உயிரிழப்பு!
வீதி விபத்துக்களில் இந்த ஆண்டு 1,600 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக அதன் தலைவர் அன்டன் டி மென்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபகாலமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் மக்கள் மிதிவண்டியில் பயணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர்.
எனினும் கவனக்குறைவாக சைக்கிள் ஓட்டுவதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை