யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர் ஆளுநர் சபை தெரிவு...! (படங்கள் இணைப்பு)
வட்டுக்கோட்டை - யாழ்ப்பாணக் கல்லூரியின் 2022ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆளுநர் சபை தெரிவு நேற்று கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் அதிபர் கலாநிதி வண .சொலமன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஆசிரியர்களால் ஒவ்வொரு வகுப்புக்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில் மாணவர்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் கல்லூரியின் மாணவர் ஆளுனர் சபையின் மாணவ முதல்வர் வேட்பாளர்களாக 2023 உயர்தர கல்வியாண்டு மாணவர்கள் இருவர் போட்டியிடுவதற்கான தகுதியை பெற்றிருந்தனர்.
இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில் கல்லூரி மாணவர்களின் பெரும்பாண்மை வாக்குகளால் பி.பிரவீனன் வட்டுக்கோட்டை யாழ்பாணக்கலூரியன் மாணவ முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் சம்பிரதாயபூர்வமாக, முன்னாள் மாணவ முதல்வரால் தற்போது தெரிவு செய்யப்பட்ட மாணவ முதல்வருக்கு சின்னம் சூட்டப்பட்டது.
இதன்போது கல்லூரியின் அதிபர் கலாநிதி வணக்கத்திற்குரிய டி எஸ் சொலமன், பிரதி அதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை