• Breaking News

    3 தடவைகள் கணவனையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண் சடலமாக மீட்பு!

     


    2 குழந்தைகளை தவிக்க விட்டு 3 முறை காதலனுடன் சென்ற பெண், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மனைவி கொலை செய்யப்பட்டதாக கணவன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி பேருந்து ஓட்டுனர் பாபு. இவரது மனைவி அமுதா இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளநிலையில் அமுதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் இடையே திருமணம் கடந்த விபரீத காதல் உருவானது. இதனால் கணவன் மற்றும் இரு குழந்தைகளை தவிக்க விட்டு ரகசிய காதலன் ஜோதீஸ்வரனுடன் சென்றுவிட்டார்.

    20 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி பாண்டிச்சேரியில் காதலனுடன் தங்கி குடித்தனம் நடத்தி வந்த அமுதாவை மீட்ட அவரது உறவினர்கள் பாபுவிடம் சமாதானம் பேசி வீட்டில் விட்டுச் சென்றனர். தனது இரு குழந்தைகளின் எதிர்காலம் கருதி பாபுவும் ஏற்றுக் கொண்டார். சில தினங்கள் கழித்து மீண்டும் அதே ஜோதீஸ்வரன் என்பவருடன் வீட்டைவிட்டு 2 வது முறையாக சென்றவரை அடுத்த நாளே மீண்டும் அழைத்து வந்தனர்.

    அதனைத்தொடர்ந்து 3வது முறையாக கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜோதீஸ்வரன் என்பவருடன் ஓடிப்போன அமுதா எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்தது. தனது குழந்தைகளுக்காக வெட்கத்தை விட்டு பாபு ஊர் ஊராக தேடி வந்தார்.

    நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் புழல் அருகே சோகமான நிலையில் வீதியின் நின்ற தனது மனைவியை பார்த்து விசாரித்த போது, காதலன் ஜோதீஸ்வரன், செத்துப்போ என்று சொல்லி தன்னை ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருப்பதாகவும் கணவன் பாபுவிடம் தெரிவித்த அமுதா அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் கம்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அமுதா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பாபுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேரில் சென்று பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவள்ளூர் டவுன் பொலிசாரிடம் தனது மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கணவர் பாபு புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் நகர காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ , சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவுசெய்து அமுதாவின் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    தலைமறைவான ஜெனதீஸ்வரனை பொலிசார் தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad