தரமற்ற கச்சாய் எண்ணெய் இறக்குமதி - வெளிவந்த பகீர் தகவல்!
தரமற்ற கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக எரிபொருள் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் உள்ள கோரல் எனர்ஜீ எனப்படும் நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயின் தரம் தொடர்பில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது 22 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
டுபாயில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனத்திடமிருந்து கச்சா எண்ணெய் அல்லது எரிபொருள் கொள்வனவு செய்ய வேண்டாம் என பெட்ரோலிய வள கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் விடுத்து வரும் கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு பெரலுக்கு 15 டொலர்களும் பீரிமியம் கொடுப்பனவாக 24 டொலர்களும் செலுத்தி கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 99000 மெற்றிக் தொன் எடையுடைய கச்சா எண்ணெயில் உற்பத்தி செய்யப்பட்ட எரிபொருட்களின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை