• Breaking News

    உயிரிழந்த சிறுமி மீண்டும் கண் திறந்ததால் பரபரப்பு ; உறவினர்கள் மகிழ்ச்சியில் - பின்னர் நிகழ்ந்த சோகம்

     


    வயிற்று வலியால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி இறுதி சடங்கில் கண் விழித்த தகவல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த  காமிலா ரோக்சானா மார்டினேஸ் (3) என்ற சிறுமி கடந்த சில தினங்களாக  வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    மேலும் காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சேர்த்துள்ளனர்.

    அவரை பரிசோதித்த மருத்துசர்கள் சிறுமிக்கு மாத்திரைகள் வழங்கியுள்ளனர். ஆனாலும் சிறுமி உடல் நிலை மோசமடைந்ததோடு சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தும் அடுத்த சில மணி நேரத்தில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோரிடம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    சிறுமி நள்ளிரவு நேரத்தில் உயிரிழந்த நிலையில், மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது.

    அப்போது சிறுமியின் உடலை சவப்பெட்டியில் வைத்து பெற்றோர் இறுதிச் சடங்கை செய்து உள்ளனர். அந்தநேரம் யாரும் எதிர்பாராதவகையில் இறந்ததாக கருதப்பட்ட சிறுமியின் கண்களில் திடீரென அசைவு தென்பட்டது.

    இதை அங்கிருந்தவர்கள் கவனித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர். மேலும் அப்போது, சிறுமி இன்னும் சாகவில்லை.

    மருத்துவரை கூப்பிடுங்கள் என்று அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் பதற்றத்தின் உச்சிக்கு போன பெற்றோர் தங்களது பாச மகளை அவசரம் அவசரமாக மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கொஞ்ச நேரத்திலேயே மருத்துவமனையில் சிறுமி மீண்டும் உயிரிழந்துள்ளது.

    இச்சம்பவம், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad