• Breaking News

    காரைநகர் பாலத்தடியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த இளம் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!


    ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவரு உயிரிழந்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

    யாழ்ப்பாணம் - காரைநகரில் இருந்து  மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்தார். காரைநகர் பாலத்தடியில் அவர்கள் பயணித்துக் கொண்டு இருந்தவேளை அவர் திடீரென தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார். அவரது கால் பாலத்தின் ஓரத்தில் இருந்த கட்டில் அடித்து துண்டாகியுள்ளது.

    காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஜெயந்தன் வேதப்பிரியா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    மோட்டார் சைக்கிளை செலுத்திய கணவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஊர்காவற்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad