ஜப்பான் நிறுவனத்தின் வாகனத்தினை யாழ். மாநகர சபைக்கு கொண்டு வருவதில் தவறிழைத்தது மத்திய அரசுதான் - பார்த்தீபன் குற்றச்சாட்டு
ஜப்பான் நிறுவனத்தின் வாகனத்தினை யாழ். மாநகர சபைக்கு கொண்டு வருவதில் தவறு இழைத்தது மத்திய அரசாங்கம் தான் என யாழ். மாநகர உறுப்பினர் வ.பார்த்தீபன் தெரிவித்தார்.
யாழ். மாநகர சபைக்கு வாகனம் கொள்வனவு செய்வதில் எற்பட்ட தவறுகள், அது தொடர்பான நிதி திரும்பிச்சென்றமை தொடர்பிலான ஊடக சந்திப்பு யாழ், ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் கருத்துதெரிவிக்கையில்,
2019 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது முன்னாள் மேயர் ஆனோல்ட்,யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்,யாழ். மாநகர நிர்வாகமாக இருக்கட்டும் தங்களுடைய சக்திகளை மீறி ஜப்பான் நிறுவனத்தின் வாகனத்தினை கொண்டுவருவதில் எவ்வாறு மேற்கொண்டார்கள் அதில் யாழ். மாநகர சபை தவறு இழைத்தது என்று தவறு கூறமுடியாது.
இதற்கு தவறு இழைத்தது மத்திய அரசாங்கம் தான் இதன் போது கருத்துதெரிவிக்கையில் மாநகர முதல்வர் வ.பார்த்தீபன் இவ்வாறு சுட்டிக்காட்டினர்.
யாழ். மாநகர சபை கூறிய விடையங்களை மத்திய அரசாங்கம் எடுக்கவில்லை, யாழ். மாநகர சபையின் அசமந்தபோக்கு என்ற ரீதியாக கருத்துக்களை விட்டுவிடுத்து எல்லோரும் ஒன்று பட்டு மத்திய அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்திய அப்பட்டமான சதிசெயல் ரீதியாக ஜப்பானின் அரசாங்கத்தினால் யாழ் மாநகர சபைக்கு கிடைக்கவேண்டிய வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. என்ற உண்மையினை அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
வாகனத்தினை கொள்வனவு செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் ஒப்பந்தம் கைச்சாத்து கையிடப்பட்டு 2019 ஆண்டு 05.மாதகாலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குள் யாழ். மாநகர சபையின் வங்கி கணக்கு இலக்கத்தின் படி 83.432 டொலர்கள் வைப்பில் இடப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் படி 14.03மில்லியன் ரூபாக்கள் வைப்பில் ஈடப்பட்டுள்ளது. அதனை தற்போது 2022 ஆம் ஆண்டில் அந்த நிதியினை மீளப்பெறுதற்காக நடவடிக்கையினை மத்திய அரசாங்கம் முன்னெடுத்து - என்றார்.
கருத்துகள் இல்லை