53 பெண்களை திருமணம் செய்த 63 வயது மன்மதன் - வாழ்க்கை வெறுத்து விட்டதாம்!
63 வயதுடைய நபர் மொத்தம் 53 பெண்களைத் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் அபு அப்துல்லா. இவர், அளித்த பேட்டி ஒன்றில் 53 திருமணங்கள் பற்றி பேசி பேசி இருக்கிறார்.
அதில், முதன்முறையாகத் திருமணம் செய்து கொண்டபோது, ஒன்றுக்கு மேல் திருமணம் செய்ய திட்டமில்லை என கூறிய அவர், 20 வயதில் தன்னை விட 6 வயது மூத்த பெண் ணை திருமணம் செய்து கொண்ட அப்து ல்லா சிறிது காலத்திலேயே இருவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டு, வேறு திருமணம் செய்து கொள்ள எண்ணி அந் த முடிவை முதல் மனைவியிடம் தெரிவித்தாக அவர் கூறினார். அதிலிருந்து விடுபட 2வது பெண்ணை திருமணம் கொண்டுள்ளார் அப்துல்லா.
பின்னர் அவர் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளுக்கு இடையே பிரச்னை வெடித்தது. இப்படியே மூன்று, நான்கு என மொத்தம் 53 திருமணம் வரை செய்துகொண்டதாகக் கூறிய அவர் மன ரீதியான நிம்மதிக்காகவே இவை நடத்ததாக கூறினார்.
அத்தோடு, ஒருநாள் வேலை விஷயமாக வெளிநாட்டுக்குப் போனாராம், அங்கேயே ஒரு வெளிநாட்டு பெண்ணை பார்த்து பிடித்துப்போய், உடனே அவரையும் கல்யாணம் செய்து கொண்டார் அப்துல்லா.
தற்போது இனிமேல் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தற்போது முடிவெடுத்துவிட்டாராம் அப்துல்லா.
அபு பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை