யாழ். மாவட்டத்தில் தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு!
யாழ் . மாவட்டத்தில் தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் ஆரம்பிக்க விரும்புவோர்களை பதிவு செய்வதற்கு மாவட்ட செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
குறித்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமானது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் கொண்டிருப்பவர்களைப் பதிவு செய்யவிருக்கின்றது.
இதன் ஆரம்ப கட்டமாக யாழ்ப்பாணம், நல்லுார், கோப்பாய், சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள அனைத்து கிராமசேவையாளர் பிரிவுகளுடாகவும் இப்பதிவுகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை தங்கள் கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். பெற்றுக்கொள்ளும் விண்ணப்பப் படிவங்களை பூரணப்படுத்தி எதிர்வரும் 20 ஆம் செவ்வாய்க்கிழமை அன்று அல்லது அதற்கு முன்பதாக கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க முடியும்.
பதிவுகள் தொடர்பான மேலதிக விபரங்கள், வழிகாட்டுதல்கள் தேவைப்படுமிடத்து 0212219359 என்ற தொலைபேசியூடாக பெற்றுக்கொள்ளலாம். எனவே தொழில் வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.
கருத்துகள் இல்லை