• Breaking News

    தந்தையின் வான் ஏறி இரண்டு வயதுக் குழந்தை பலி!

     


    திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தையின் வேனில் சிக்குண்ட சிறுமி பலியான சம்பவம் ஒன்று இன்று (07) இடம் பெற்றுள்ளது.

    சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

    தந்தை வீட்டில் இருந்து திருகோணமலைக்கு திருமண வைபவத்துக்கு செல்ல உள்ள நிலையில் வேனை பின்னால் எடுத்த போது அதற்குள் சிக்குண்டு ஸ்தலத்தில் தனது மகள் பலியானதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

    இவ்வாறு உயிரிழந்த சிறுமி தம்பலகாமம் நாயன்மார் திடலை சேர்ந்த (வயது 02) ஆர்.நசிட்றா என பொலிசார் தெரிவித்தனர்.

    குறித்த வேண் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad