• Breaking News

    தேசிய மட்ட துடுப்பாட்ட அணிக்குள் உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாண மாணவிக்கு கிடைத்த வெற்றிப் பரிசு - மகிழிச்சியில் மாணவியின் குடும்பம்!

     


    பத்தொன்பது வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய துடுப்பாட்ட அணிக்குள் யாழ். சுழிபுரம் கிழக்கு காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த மாணவியான செல்வராசா கிறிஸ்ரிகா உள்வாங்கப்பட்டுள்ளார்.

    தந்தை, தாய் மற்றும் கிருஸ்றிகா உட்பட மூன்று பெண் பிள்ளைகளை உள்ளடக்கியது தான் அவரது குடும்பம்.

    கிருஸ்றிகாவின் தந்தை கூலித் தொழில் செய்துவரும் நிலையில் அவர்கள் வசிப்பதற்கு சொந்த காணியோ வீடோ இருக்கவில்லை. இந்த நிலையிலும் கூட கிருஸ்றிகா தனது அயராத முயற்சியால் வெற்றியை தனது பக்கம் இழுத்துள்ளார்.

    இந் நிலையில் கிருஸ்றிகாவின் குடும்ப நிலையினை கருத்திற்கொண்டு, இலங்கை இராணுவத்தின் 513 ஆவது படைப்பிரிவு 16 வது கெமுனு படையணி என்பவற்றின் முயற்சியினால் கிருஸ்றிகாவின் குடும்பத்திற்கு காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

    காணியை வழங்கியதோடு மட்டுமல்லாமல் இராணுவத்தினர், கொள்வனவு செய்த காணியில் புதிய வீடு அமைப்பதற்கான அடிக்கலையும் இன்றையதினம் நாட்டி வைத்தனர்.

    இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக 51 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எ.எ.உதயகுமார கலந்து சிறப்பித்திருந்தார்.

    இதற்கான மனித வள உதவியினை 16 வது கெமுனு படையணி வழங்குகிறது.
    இந்நிகழ்வில் அரச அதிகாரிகளும் பொதுமக்களும் இராணுவத்தினரும் கலந்துகொண்டனர்.

    இந்த வீடு அமைப்பதற்கான நிதி அனுசரணையினை தியாகி அறக்கட்டளை வழங்குகின்றது.

    கிருஸ்றிகாவின் அயராத உழைப்பிற்கு கிடைத்த பரிசே இந்த காணியும் வீடும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad