• Breaking News

    ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

     


    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பானை ஒன்றை அனுப்பியுள்ளது.

    ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது.

    ஈஸ்டர் தாக்குதலை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதியை பொறுப்புக் கூறுமாறு கோரி ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்ட அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு இன்றைய தினம் கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad