• Breaking News

    கொலை செய்யப்படுவதற்கு முன் மிரட்டுதலுக்குள்ளான பெண் - விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்

     


    ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை அமைப்பாளர் அலுவலகத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட யுவதி, திருமணம் செய்யவிருந்த நிலையில் திருமணம் செய்யாமல் இருக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    கேகாலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட யுவதியும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அமைப்பாளரும் மாத்திரமே தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தில் அலுவலகத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

    சந்தேகநபரின் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா அமைப்பில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் இருவரையும் தவிர வெளியாட்கள் யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.

    அத்துடன், கைதுப்பாக்கியின் உரிமையாளரை அடையாளம் காணவும் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    “உன்னை திருமணம் செய்து கொள்ள விடமாட்டேன்” என்று கூறி இந்த யுவதியை மிரட்டிய சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

    சந்தேகநபருக்கும் இந்த யுவதிக்கும் இடையே வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகள் நடந்து வருகின்றன. எவ்வாறாயினும், கொலை செய்யப்பட்ட பெண் சந்தேக நபருடன் சுமார் 16 வருடங்களாக வேலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad