கடவாடப்பட்ட மாட்டின் இறைச்சியை சட்டவிரோதமான முறையில் பேருந்தில் கொண்டு சென்ற இருவர் யாழில் கைது!
யாழ். புங்குடுதீவில் வடக்குப் பகுதியில் களவாடப்பட்டு வெட்டப்பட்ட 50 கிலோ கிராம் நிறைய உடைய மாட்டு இறைச்சியினை பயணப்பையில் வைத்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றில் இருந்து மாட்டு இறைச்சி கைப்பெற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு வாழ்மக்கள் வழங்கிய இரகசிய தகவலை அடுத்து மண்டைதீவு பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து பொலிசார் சந்தேக நபர் இருவரையும் கைதுசெய்துள்ளதுடன் இறைச்சியினை பறிமுதல் செய்துள்ளனர்.
தீவகத்தின் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் சரவணையைச் சேர்ந்த இன்னொருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நாளை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தப்படயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்துகள் இல்லை