நித்தியானந்தாவுக்கு விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி!
பிரபல சர்ச்சை சாமியாரான நித்தியானந்தாவை, விஷம் கொடுத்து ரகசியமாக கொல்ல முயற்சி நடந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா, நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்த காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, இந்தியாவில் இவர் மீது பல வழக்குகளும் இருக்கின்றது.
இவர் மீது அதிகமான புகார்கள் குவிய தொடங்கியதால், நாட்டில் இருந்தே வெளியேறிய இவர், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியதோடு, சில காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அதுவரை இவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாமல் இருந்த பக்தர்களுக்கு கைலாசா என்ற தனி தீவில் இருப்பதாக தெரியவந்தது.
தற்போது சில மாதங்களாக உடல்நிலை முடியாமல் இருந்து வரும் நித்தியானந்தாவிற்கு என்ன நடந்தது என்று பக்தர்கள் அதிகமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக இலங்கை அரசிடம் அனுமதி கோரியிருப்பது தொடர்பான தகவல்கள் சமீபத்தில் வெளியாகியது.
மிகவும் ஆரோக்கியமாக இருந்த நித்தியானந்தாவுக்கு, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதற்கு, ஆளை மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதே காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நித்தியானந்தாவிற்கு இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதால், இதனை கைப்பற்ற அவருடன் இருப்பவர்களே, ரகசியமாக விஷம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை