சுகாதார பணிப்பாளர் நியமனம் தொடர்பில் என்னிடம் பேசவில்லை - வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!
வட மாகாண சுகாதார பணிப்பாளராக புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்ட நிலையில் அவரது நியமனம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சு தன்னிடம் பேசவில்லை என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் நியமனம் தகுதியானவர்கள் வடக்கு மாகாணத்தில் இருக்கும் நிலையில் ஏன் கொழும்பிலிருந்து ஒருவர் நியமிக்கப்பட்டதாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு சுகாதார பணிப்பாளர் நியமனம் தொடர்பில் நியமிக்கப்பட்ட பின்னரே தான் அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ஆளுநர் வெளிநாடு ஒன்றில் நிற்பதால் குறித்த விடயம் தொடர்பில் துறை சார்ந்த அமைச்சருடன் நேரில் பேச உள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை