கபுட்டு காக் காக் காக் - பொலிஸாருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை!
கடந்த 9ஆம் திகதி பல சாரதிகள் ‘கபுட்டு காக் காக் -பசில் என முன்னாள் நீதியமைச்சரை ஏளனம் செய்து பசில் என்ற பாணியில் வாகனத்தை ஒலிக்கச் செய்தமை தொடர்பில் கோட்டை பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு இலக்கம் 07 நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதவான் பொலிஸார் மீது அதிருப்தி தெரிவித்தார்.
உயர் அதிகாரிகளின் சட்ட உத்தரவை மட்டுமே அமல்படுத்த வேண்டும் என போலீசாருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது.
அதன்பிறகு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் மீது கடும் கோபம் கொண்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அப்போதைய கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டங்கள் இடம்பெற்றதுடன் வன்முறைகளும் வெடித்திருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.
கருத்துகள் இல்லை