ஒரே இளைஞரை காதலித்த 2 பெண்கள்; டொஸ் போட்டு முடிவெடுத்த கிராமத்தினர்! சினிமாவையே மிஞ்சிய சம்பவம்
ஒரே நேரத்தில், இரண்டு பெண்களை காதலித்து, திருமணம் செய்ய டொஸ் போட்டு முடிவெடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம், சக்லேஷ்பூர் என்ற பகுதியை சேர்ந்த இளைஞரை ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் காதலித்தனர். இதையடுத்து, ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் அந்த இளைஞரை காதலித்து நிலையில் கடைசியில் இருவரும் இளைஞரை திருமணம் செய்ய ஆசைப்பட்டனர்.
இதனால் இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர் வீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால், இரண்டு பெண்களும் உயிருக்கு உயிராக விரும்புவதால் எந்த பெண்ணுக்கு அவரை திருமணம் செய்து வைப்பது என்ற குழப்பத்தை தீர்க்க பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
இந்த பஞ்சாயத்தில் முதல் கட்டமாக இரு பெண்களிடம் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க பஞ்சாயத்தார் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இரண்டு பெண்களுமே பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியின்றி பஞ்சாயத்தார் டாஸ் போட்டு இரண்டு பெண்களில் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்தனர்.
இதற்கு அந்த இரண்டு பெண்களும் அவருடைய குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். டாஸ் போட்டு தேர்வான பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்த இன்னொரு பெண் தான் காதலித்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு, உங்கள் முன்னாடி நான் நன்றாக வாழ்ந்து காண்பிக்கிறேன் பாருங்கள் என சவால் விட்டு சென்றுள்ளார்.
இதனால், ஒரு பெண்ணைத் திருமணத்திற்கு தேர்வு செய்ய சினிமாவை தாண்டி, இதுவரை கேள்வியே படாத வகையில் டொஸ்போட்டு தேர்வு செய்த செய்தி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துகள் இல்லை