• Breaking News

    நடுவீதியில் திடீரென பற்றி எரிந்த பேருந்து - 12 சிறுவர்கள் உட்பட 46 பேர் பரிதாப மரணம்!!!

     மேற்கு பல்கேரியாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதை அடுத்து தீ பிடித்ததில் 12 சிறுவர்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பல்கேரிய தலைநகருக்கு தென் மேற்கே அமைந்துள்ள பொஸ்னெக் கிராமத்திற்கருகில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

    பேருந்து தீப்பிடித்தவேளை அதிலிருந்து தப்பிக்க குதித்த ஏழுபேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் நான்கு வயதுடைய இரட்டை சகோதரர்களும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad