• Breaking News

    அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல “தாதா“ பலி...!


    இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  உலக பாதாளக்குழு உறுப்பினர் 'டிங்கர் லசந்த' என அழைக்கப்படும் ஹேவாலுனுவிலகே லசந்த  உயிரிழந்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

    இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

    குறித்த அசந்தேக நபர் களுத்துறை - தியகம பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக காவல்துறையினரால் குறித்த பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    இதன்போது, திடீரெனக் காவல்துறையினர் மீது குறித்த நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து, காவல்துறையினர் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

    இதன்போது சந்தேகநபர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதன்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கொல்லப்பட்ட நபர் பாதாள உலகக்குழு உறுப்பினரான சன்ஷைன் சுத்தாவின் கொலை உள்ளிட்ட மேலும் பல படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad