• Breaking News

    ஆறு வயதுச் சிறுமியை கடத்திச் சென்று துன்புறுத்திய இளைஞன் கொடிகாமம் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு!

      ஆறு வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துன்புறுத்திய 25 வயதுடைய அயல்வீட்டு இளைஞனை கொடிகாமப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

    குறித்த சிறுமியின் பெற்றோர் பூநகரியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுமி கொடிகாமத்தில் உள்ள பேர்த்தி வீட்டில் தங்கியிருந்தார்.

    சிறுமி நேற்று அயல் வீட்டில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பி வரும் வேளையில் பக்கத்து வீட்டு இளைஞன் சிறுமியை கடத்திச் சென்று தனது வீட்டில் கயிற்றினால் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளார். அதன்பின்னர் சிறுமியின் உறவினருக்கு " சிறுமியின் தந்தை வந்தால்தான் சிறுமியை விடுவிப்பேன்" என கூறினார்.

    இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.

    முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட கொடிகாமப் பொலிசார் நேற்றைய தினமே சிறுமியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளதுடன் குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

    பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், அந்த இளைஞனுக்கும் சிறுமியின் தந்தைக்கும் இடையில் நகைப் பிரச்சினை இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad