• Breaking News

    வலி. மேற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடானது 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்...

     


    வலி.மேற்கு - சுழிபுரம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட கூட்டமானது தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் இன்று காலை, சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

    தவிசாளரால் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் இடம்பெற்றது.

    எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் குறித்த பாதீட்டை  ஆதரிப்பதாக  தெரிவித்தனர்.

    இதனையடுத்து பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது 18மேலதிக வாக்குகளால் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

     25 உறுப்பினர்களை கொண்ட இச்சபையில் 5 உறுப்பினர்கள் கூட்டத்துககு சமூகமளிக்காத நிலையில் பாதீட்டிற்கு ஆதரவாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 9பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் 5பேர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 3பேர், சுயேட்சை குழு உறுப்பினர்கள் 2 பேர் உள்ளடங்களாக 19உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

    பாதீட்டிற்கு எதிராக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சதீஸ்வரன் வாக்களித்தார்.

    இக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad