• Breaking News

    தேசிய காற்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வவுனியா அணி வெற்றிவாகை சூடியது...!

     தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் தேசிய ரீதியிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த மூன்று நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் இறுதி போட்டி நேற்று யாழ். சுன்னாகம் ஸ்கந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

    இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் தங்களுடைய மாவட்டத்தை பிரதிபலிக்கும் முகமாக களம் இறங்கினர்.

    இப்போட்டியானது நொக்கவுட் முறையில் இருந்தமையால் ஆரம்பத்தில் இருந்தே அனைத்து போட்டிகளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்த நிலையில், அரையிறுதி ஆட்டத்திற்குள் வவுனியா அணியை  எதிர்த்து மட்டக்களப்பு அணியும் மன்னார் அணியை எதிர்த்து இரத்தினபுரி அணியும் மோதிக்கொண்ட இப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு வவுனியா அணி மற்றும் இரத்தினபுரி அணிகள் மோதிக்கொண்டன.

    இப்போட்டியானது சமநிலையில் முடிவடைந்தமையினால் பனால்ட்டி முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது 5:3 என்ற கோல் கணக்கில் வவுனியா அணி வெற்றிவாகை சூடியது.

    இதேவேளை இரண்டாம் இடத்தினை இரத்தினபுரி அணியும் மூன்றாவது இடத்தினை மன்னார்  அணியும் கைப்பற்றக் கொண்டது.

    பலத்த எதிர்பார்புக்கள் மத்தியில் சிறந்த முன்கள வீரர்களுடன் களம் இறங்கிய மன்னார் அணி மூன்றாவது இடத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad