தமிழர்களுக்கு சாதகமான முடிவை அறிவித்தது அமெரிக்கா...!
நிரந்தர சமாதானம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக்குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுமந்திரன் குழுவினர், அமரிக்க ராஜாங்க திணைகளத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவிச் செயலாளர் லீசா பீற்றர்சன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனும், உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் சந்திப்புக்களை நடத்தினர்.
இவ்வமைப்புக்கள் இலங்கையில் தமிழ் தேசிய இனப் பிரச்சனை என்பதை ஓரம்கட்டும் வகையில், சிறுபான்மை குழுவாக தமிழ் மக்களை சித்தரிக்குமாறு தமது டுவிட்டரில் செய்தி வெளியிட்டன.
அரசியல் தீர்வுக்காக பேசச் சென்றதாக சொல்லிக்கொண்ட சட்ட நிபுணர் குழுவும் அதனை ஆமோதிக்குமாறு அச் செய்தியை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டனர்.
சிறுபான்மைக் குழு என தமிழ் மக்களை சிறுமைப் படுத்தி அவர்களின் அரசியல் ஸ்தானத்தை குறைமதிப்பு செய்வதை தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் என்ற புதிய அமைப்பு ஆட்சேபித்து இராஜாங்க திணைக்களத்திற்கு செய்தியிட்டது.
அதனைத் தொடர்ந்து கீச்சக பக்கதில் சில முக்கிய பிரமுகர்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். பேராசிரியர் ஓரின் யிவ்டாசல், சமூக விஞ்ஞானி அனுராதா மிட்டேல், ஒக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேத்தா பட்கர், பிரபல மனித உரிமை சமூக செயற்பட்டாளர் கலாநிதி சுவாதி சக்கரபூர்த்தி எனப் பலரும் தமது ஆதரவை தெரிவிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு செயலகத்தில் துணை செயலர் டொனால்ட் லூவுடன் சந்திப்பு நடந்தது.
இச்சந்திப்பை தொடர்ந்து ‘சிறுபான்மை குழு’ என்பதற்கு பதிலாக ‘தமிழ் மக்கள்’ என்று மாற்றம் செய்து கீச்சகத்தில் செய்தி வெளியிட்டனர்.
அதில் நிரந்தர சமாதானம் மற்றும் அவர்களின் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக் குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் என்ற புதிய இளைய தலைமைத்துவ அமைப்புக்கு அரசியல் செயற்பாட்டாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை