• Breaking News

    தேனும் நெய்யும் சேர்ந்தால் அது விஷமாகுமா...?

     


    தேன் ஆரோக்கியமான மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

    இத்தகைய தேனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகளை பெற முடியும்.

    தண்ணீரடன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை குறித்து பார்க்கலாம்.


    வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி, காய்ச்சலில் இருந்து விலகி இருக்கலாம்.

    தொண்டையில் இருக்கும் புண் மற்றும் வறட்டு இருமலுக்கும் தேன் அரிய மருந்து.

    தேன் கலந்த நீரில் நொதிகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமாக இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.


    வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தொடர்ச்சியாக குடித்து வரும் போது அலர்ஜி வருவதைத் தடுக்கலாம்.

    கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோயின் அபாயத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

    வெந்நீரில் தேனும், எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் உணவு செரிமானம் நன்முறையில் நடக்கும்.

    இத்தனை நன்மைகளை கொண்ட தேனையும் அளவாக தான் பயன் படுத்த வேண்டும் அதிகம் பயன்படுத்தும் போது உடலுக்கு ஆபத்தை கூட ஏற்படுத்தலாம். 

    தேனுடன் ஒரு போதும் நெய் அதிகம் வேண்டாம்

    நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும்.

    மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும்.

    அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad