• Breaking News

    கணவர் அடிப்பதை சரி என ஏற்கும் மனைவிகள் - இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்...

     இந்தியாவில் தங்கள் கணவர் அடிப்பதை 30 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் நியாயம் என ஏற்றுக்கொள்வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

    தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2019-21) முடிவுகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அசாம், ஆந்திரப் பிரதேசம், பீகார், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    கணக்கெடுப்பின் ஒருபகுதியாக, மனைவி கணவனிடம் சொல்லாமல் வெளியே சென்றாலோ, குழந்தைகளையோ வீட்டையோ புறக்கணித்தாலோ, கணவனுடன் வாதிட்டாலோ, உடல் உறவுக்கு மறுத்தாலோ, சரியாக உணவை சமைக்கவில்லை என்றாலோ, மனைவி மீது கணவர் சந்தேகம் கொண்டாலோ, மாமனார்- மாமியார் ஆகியோருக்கு மனைவி மரியாதை தரவில்லை என்றாலோ, ஆகிய 7 சூழ்நிலைகளில் கணவர் தனது மனைவியை அடிப்பது நியாயமா என்று கேள்வி கேட்கப்பட்டது.


    இதற்கு, 18 மாநிலங்களில் 14 மாநிலங்களைச் சேர்ந்த 30 சதவிதத்திற்கும் அதிகமான பெண்கள் சரியானது என்று கூறியுள்ளனர்.

    இதில், அதிகபட்சமாக தெலங்கானாவில் 83.8 சதவீதம் பெண்கள் தங்கள் கணவர் அடிப்பதை சரி என்று தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் 14.8 சதவீத பெண்கள் மட்டுமே கணவர் தங்களை அடிப்பது சரி என்று கூறியுள்ளனர்.

    இதேபோல், கர்நாடகாவை சேர்ந்த 81.9 சதவீத ஆண்கள் மனைவியை கணவர் அடிப்பது சரி என்றும் குறைந்தபட்சமாக ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த 14.2 சதவீத ஆண்கள் கணவர் மனைவியை அடிப்பதை நியாயப்படுத்துகின்றனர்.

    இதில் பெரும்பாலானோர், மனைவி குழந்தைகளையோ வீட்டையோ கவனிக்காமல் இருந்தாலோ மாமனார்-மாமியாருக்கு மரியாதை தராமல் இருந்தாலோ கணவர் அடிப்பது சரியானதுதான் என்று கூறியுள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad