• Breaking News

    YAN Sri Lanka அமைப்பினால் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மதுபானம் மற்றும் சிகரட் பாவனை பற்றிய விழிப்புணர்வு...

     


    Youth Action Network - Sri Lanka (YAN Sri Lanka) இளைஞர் வலயமைப்பினால் மதுபானம் மற்றும் சிகரட் பாவனையினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் அகில இலங்கை ரீதியாக 25 மாவட்டங்களிலும் இடம்பெற்றது.

    அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (2021.11.20) காலை 9.30  மணியளவில் யாழ். மாவட்டத்தில் பேரூந்து நிலையம் முன்பாக யாழ். மாவட்ட YAN SRI LANKA அமைப்பின் மாவட்ட அமைப்பாளர்கள் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இவ் விழிப்புணர்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.


    இவ் விழிப்புணர்வு நிகழ்வில் அனைத்து மகளிர்களுக்கும் பியர் வயிறு அற்ற கணவனை பெற உரிமை உண்டு மற்றும் சாராயக் கம்பனிகளின் தந்திரோபாயங்களுக்கு ஏமாறும் ஏமாளிகளை மூளை உள்ள எந்த பெண் தான் விரும்புவாள்?  போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் மூலம்  மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.










    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad