களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் தீ விபத்து- தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை...
களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தீப்பரபல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவு கூறியுள்ளது.
இதேவேளை தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதுடன், மின் ஒழுக்கின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை