• Breaking News

    மீண்டும் மீண்டும் சீனாவிடம் கடன் வாங்கும் இலங்கை...!

     சிறிலங்கா அரசாங்கம்  சீனாவிடமிருந்து மேலும் 300 மல்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த ஆண்டின் ஆரம்பத்தில் செலாவணி பரிமாற்ற அடிப்படையில் சிறிலங்காவிற்கு கடன் வழங்க சீனா இணங்கியிருந்தது.

    இது குறித்து  அப்போதைய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கடந்த மார்ச் மாதம் ஊடக சந்திபொன்றில் கூறியிருந்தார்.

    சீனாவிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளும் யோசனைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இந்த கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    இதேவேளை, ஓமான் மற்றும் இந்தியாவிடமிருந்தும் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்நிய செலாவணி கையிருப்பினை அதிகரித்து கொள்ளவும், எரிபொருள் கொள்வனவு செய்வதற்கும் இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad