யாழில் வெடித்துச் சிதறியது எரிவாயு அடுப்பு...!
யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள வீடு ஒன்றிலிருந்த எரிவாயு அடுப்பு ஒன்று இன்று வெடித்துச் சிதறியது.
கந்தரோடையில் உள்ள பொன்னுத்துரை சந்திரகுமார் என்பவரது வீட்டிலேயே எரிவாயு அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.
குறித்த வீட்டில் எரிவாயு சிலிண்டர் வீட்டிற்கு வெளியே இருந்ததால் அனர்த்தம் பாரிய அளவில் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை