• Breaking News

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி!

     


    யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று 27ஆம் திகதி இலங்கையிலும் உலக நாடுகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது.

    அந்தவகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் மரபுரீதியாக இன்று 6.05 மணிக்கு ஈகைச்சுடர், இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தூபியில் ஏற்றப்பட்டது.

    அத்துடன் உயிரிழந்த வீர மறவர்களுக்கு  முழந்தாலிட்டு மாணவர்களால் அஞ்சலியும் செலுத்தினர். 

    பல்கலைக்கழக சூழலில் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு வழமையை விட கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகமாக இருக்கின்ற நிலையில் மாணவர்கள் தமது ஆத்மார்த்தமான கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

    இன்று காலை பல்கலைக்கழக வேலை நாளாக இருந்தாலும் பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழக கதவுகளை பூட்டிய வண்ணம் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad